நம்ப முடியாத அதிசயம்... டிரில்லியன் டாலர் செலவு செய்து 2030க்குள் கற்பனை நகரத்தை கொண்டுவர போகும் சவூதி !
மேற்கு ஆசிய நாடான சவூதி அரேபியா மிகப்பெரிய பொறியியல் அதிசயத்தை நகர வடிவில் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
எண்ணெய் வளம் மிக்க நாடான செளதி அரேபியா, கார்பன் இல்லா நகரத்தை உருவாக்குகிறது.
இந்த அதிசய நகரத்தில் வேலை, வாழ்க்கை, விவசாயம் மற்றும் பொழுதுபோக்கு என அனைத்து வசதிகளும் இருக்கும்.170 கிலோமீட்டர் அளவில் நீண்டுள்ள நகரம் இது.
2030க்குள் கற்பனை நகரத்தை கொண்டுவர போகும் சவூதி
இந்த அற்புதமான அதிசய நகரத்தின் கட்டுமானம் 2030க்குள் முடிக்க வேண்டும் என்பது அரசின் திட்டம். மாய நகரம் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்களும் வெளியாகியுள்ளன.
கற்பனை நாவலில் மட்டுமே படித்திருக்கக்கூடிய மாய நகரத்தை செளதி அரேபிய பட்டத்து இளவரசரும் ஆட்சியாளருமான முகமது பின் சல்மான் கட்ட திட்டமிட்டிருக்கிறார்.
இதன் கட்டுமானம் 2030க்குள் முடிக்க வேண்டும் என்பது அவரது திட்டம். இந்த நகரம் மனிதகுலத்தின் அடுத்த அத்தியாயமாகவும், பட்டத்து இளவரசரின் பாரம்பரியமாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதுபோன்ற ஒரு நகரத்தை உருவாக்குவது என்பது கற்பனையில் மட்டுமே முடியும் என்று நினைத்திருப்போம். ஆனால், 2030ம் ஆண்டுக்குள் கட்டி முடிப்போம் என்று சவூதி அரேபிய அரசு உறுதியளிக்கிறது. பார்க்கலாம் இது சாத்தியமாகுமா என்று.