சனி பகவானின் நட்சத்திர மாற்றம்... பேரதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசியினர் யார்?
ஜோதிடத்தின்படி, சனி பகவானின் ஒவ்வொரு அசைவுகளும் மிகவும் முக்கியமானதாகும். ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப சனி பகவான் பலன்களை தரக்கூடியவர். சனி பகவான் ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் இருப்பார் மற்றும் அவ்வப்போது தனது நட்சத்திரத்தையும் மாற்றிக் கொள்வார்.
கிரகங்களில் முக்கிய கிரகமாக கருதப்படும் சனி தற்போது மீன் ராசியிலும் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்திலும் இருந்து வருகிறார். இந்த நிலையில், பிப்ரவரி 22ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பயணிக்க உள்ளார்.
சனியின் இந்த பயணம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது. அது நேர்மறையானதாக உள்ளது. தற்போது சனியால் நல்ல பலன்களை பெற இருக்கும் ராசிகள் குறித்து பார்க்கலாம்.
மிதுனம்
சனியின் இந்த நட்சத்திர பயணம் மிதுன ராசிக்கு அபிரிமிதமான பலன்களை கொடுக்க இருக்கிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் கடின உழைப்பு நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நிதி ரீதியாக இருக்கும் பிரச்சனை தீரும். மேலும், சனியின் இந்த பெயர்ச்சியில் மிதுன ராசிக்காரர்களில் தொழில் தொடங்க நினைப்பவர்களை தொடங்கலாம்.
மகரம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு தைரியத்தை கொடுக்க இருக்கிறது. இந்த காலகட்டத்தில் துணிச்சலுடன் செயல்பட முடியும். வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். கையில் எடுக்கும் காரியங்களில் வெற்றி அடைய முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீனம்
சனியின் இந்த நட்சத்திர பெயச்சி மீன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்க இருக்கிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். சமூகத்தில் இருக்கும் மதிப்பும் மரியாதையும் உயரும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். மேலும், இந்த காலகடத்தில் மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபாடாமல் இருப்பது நல்லது. அது உங்களுக்கு நன்மைகளை தரும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |