ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி: அதிர்ஷ்டம் தேடி வரும் டாப் 3 ராசிகள்!
ஜோதிட சாஸ்த்திரத்தின் பிரகாரம் நீதியின் கடவுளாக போற்றப்படுபவர் சனி பகவான். மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகளின் அதிபதியாகவும் திகழ்கின்றார். ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை ஆண்டுகள் வரை தங்கி பயணிப்பார். இந்த காலகட்டத்தில் அவர் அவ்வப்போது நட்சத்திரங்களையும் மாற்றுவார்.
சனியின் இந்த பெயர்ச்சிகள் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. தற்போது சனி பகவான் மீன ராசியில் சஞ்சரித்து வருவதுடன், ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பயணம் செய்து வருகிறார்.

இந்நிலையில், ஜூலை 2ஆம் தேதி அவர் ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நுழைய உள்ளார். அங்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை தங்கியிருப்பார்.
சனியின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி 12 ராசிகளின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் மிகவும் சாதகமான பலன்களை அளிக்கக்ப் போகின்றது.
அப்படி அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம், பணவரவு மற்றும் குடும்ப நலன் போன்றவற்றில் நல்ல மாற்றங்களை அனுபவிக்கப்போகும் டாப் 3 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் 2-ஆம் பாதத்தில் நுழைவதால், மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இந்த காலகட்டத்தில் பிரகாசிக்கப்போகின்றது.
அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைத்து, தொழில் மற்றும் வேலை தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
தொழில் செய்பவர்கள் வளர்ச்சியையும் லாபத்தையும் காண்பார்கள். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து வருமானம் அதிகரிக்கலாம். நீண்ட நாட்களாக இருந்த உடல்நலப் பிரச்சனைகளும் படிப்படியாக குறையும்.
கடகம்

சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் 2-ஆம் பாதத்தில் பெயர்ச்சி அடைவது கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான காலத்தை உருவாக்கும்.
அதிர்ஷ்டம் கைகொடுத்து, புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். நிதி நிலைமை வலுப்பெற்று, பொருளாதார முன்னேற்றம் காணப்படும்.
பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர்களுக்கு லாபகரமான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கக்கூடும். மேலும், நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
கன்னி

சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் 2-ஆம் பாதத்தில் நுழைவதால், கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலம் பல நன்மைகளைத் தரும். மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
பல்வேறு வழிகளில் பணவரவு அதிகரிக்கக்கூடும். கடின உழைப்புக்கான அங்கீகாரமும் பலனும் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள்.
புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். தம்பதிகளுக்கிடையேயான அன்பும் புரிதலும் மேலும் அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |