சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026 : ஜூலை முதல் இந்த ராசியினரை பிரச்சினைகள் வாட்டப்போகுது!
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக பலன்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
கிரக பெயர்ச்சிகளில் குறிப்பாக சனி பெயர்ச்சிக்கு இந்து மதத்தில் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. காரணம் சனிபகவான் நீதியின் கடவுளாக திகழ்கின்றார்.

அவர் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப வாழும் காலத்திலேயே அதற்கான பலன்களை பாரபட்சம் இன்றி கொடுத்துவிடுவார். அதனால் சனி பெயர்ச்சி என்றாலே ஒரு வித அச்ச உணர்வு பெரும்பாலானவர்கள் மத்தியில் காணப்புடுகின்றது.
அந்தவகையில், 2026-ஆம் ஆண்டில், சனிபகவான் இரண்டு முக்கிய ஜோதிட மாற்றங்களுக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஒன்று ஜூலை மாதத்திலும், மற்றொன்று அக்டோபர் மாதத்திலும் நிகழப்போகிறது. குறித்த சனி பெயர்ச்சிகளால் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திக்கப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வருடத்தில் ஈடுத்த ஆறு மாதங்கள் மிகவும் சவாலானதாக இருக்கும். இவர்களின் நிதி நிலையில் பாரிய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சனிபகவானின் வக்ர பெயர்ச்சி உறவுகளுக்கு மத்தியில் மோதல்களையும் மன கசப்புகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
கடந்த காலங்களில் பெற்ற கடன்பகளால் அதிக பிரச்சினைகளை அனுபவிக்க நேரிடலாம். திருமண வாழ்க்கையிலும் தொழில் வாழ்ககையிலும் நெருக்கடியான நிலை உருவாக வாய்ப்புள்ளது.
கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்கள் இக்காலகட்டத்தில் தங்கள் தொழில் வாழ்க்கையிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி சவாலான காலகட்டத்தை அனுபவிக்க வாய்ப்புள்ளது.
குறிப்பான சனியின் தாக்கத்தினால் பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளில் சிக்கி மன அழுத்தத்துக்கும் ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க நேரிடலாம்.
இது அவர்களின் நீண்டகால இலக்குகளையும், நற்பெயரையும் பாதிக்கக் அதிக வாய்ப்புள்ளது. நிதி விடயங்களை கையாளும் போது கூடுதல் கவனம் தேவை. பெரிய தொகை பணத்தை இழக்க வாய்ப்புள்ளது.
தனுசு

தனுசு ராசிக்காரர்களின் வாழ்ககையில் இந்த சனிப்பெயர்ச்சியின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும்.
பொதுவாகவே குடும்ப வாழ்க்கை மற்றம் பொறுப்புக்களில் சிக்கிக்கொள்ள விரும்பாத இவர்களுக்கு எதிர்கால வாழ்க்கை குறித்து அச்ச உணர்வு உருவாகும். தொழிலில் ஈடுபாடு காட்ட முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில், தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களையும் கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |