ஆரம்பமாகும் சனியின் விஷ யோகம் - சோதனை காலத்தில் தவிக்கப்போகும் 4 ராசிகள்
சனியும் சந்திரனும் ஒரே ராசியில் சேரும்போது 'விஷ யோகம்' உருவாகும். இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு வாழ்க்கையில் பல சோதனை காலத்தை கொடுக்கும்.

மிதுன ராசி - விஷ யோகத்தால் பொறுப்புகள் அதிகரிக்கலாம். முக்கிய முடிவுகளை சில நாட்களுக்கு ஒத்திவைப்பது நல்லது. அவசர முடிவுகள் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும். அனைவரிடமும் நிதானமாகவும் நட்பாகவும் பழகுவது இந்த காலத்தில் சிறந்தது.

சிம்ம ராசி - விஷ யோகத்தால் மூன்று நாட்கள் மனஅழுத்தம் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம். ஆபத்தான முதலீடுகள், சர்ச்சைகள் மற்றும் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. நிதானமாக செயல்படுவது அவசியம்.

கன்னி ராசி - விஷ யோகத்தால் திருமண வாழ்க்கை மற்றும் கூட்டுத் தொழிலில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். துணையுடன் பொறுமையாகப் பேசி, ஈகோ மற்றும் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி - விஷ யோகத்தால் மூன்று நாட்கள் குடும்பப் பொறுப்புகள் அதிகரித்து மன அமைதி குறையலாம். சொத்து, வாகனம் தொடர்பான விஷயங்களில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பேசும்போது நிதானமாக இருப்பது தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).