சனி வக்ர பெயர்ச்சியால் உச்சத்திற்கு செல்லப்போகும் ராசிகள்! 6 மாதங்குள்கு நீங்க தான் ராஜா
சனி வக்ர பெயர்ச்சி ஜூலை 27ஆம் தேதி நடக்கிறது. சனி வக்ர பெயர்ச்சியால் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் பெருகும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

ஜோதிட ரீதியாக 9 கிரகங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக சனி பகவான் இருக்கிறார். சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சனி பகவான் தற்போது மீன ராசியில் இருக்கிறார். சனி பகவான் ஜூலை 27ஆம் தேதி அன்ற மீன ராசியில் வக்ர நிலைக்கு செல்ல உள்ளார். இவர் டிசம்பர் 11ஆம் தேதி அதிகாலை 3.51 மணிக்கு வரை சனி வக்ர நிலையில் இருப்பார். சனியின் இந்த வக்ர பெயர்ச்சி பல ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலனை கொடுக்கப்போகிறது.

ரிஷபம் - சனி வக்ர பெயர்ச்சியால் அடுத்த 6 மாதங்கள் அதிர்ஷ்டம் நிறைந்த காலமாக அமையும். தொழில், வியாபாரம் மற்றும் நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள், பிரச்சினைகள் தீரும். புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் மரியாதையும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள், சக ஊழியர்களின் ஆதரவு கிடைத்து, கடின உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கும்.

விருட்சிகம் - சனி வக்ர பெயர்ச்சியால் உடல்நலத்தில் முன்னேற்றம், நிதிநிலை மேம்பாடு மற்றும் முதலீட்டில் நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்டநாள் நிலுவைப் பணிகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கவும், கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரவும் இது சாதகமான காலமாக இருக்கும்.

மீனம் - சனி வக்ர பெயர்ச்சியால் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். புதிய அறிமுகங்கள் நன்மை தரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். நிதிநிலை மேம்படும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாட்டு வாய்ப்புகள் கைகூடும். தொழிலதிபர்களுக்கு முதலீடுகள் மற்றும் தொழிலில் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கலாம்.

மகரம் - சனி வக்ர பெயர்ச்சியால் செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வருமானம் அதிகரிக்கும். கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். போட்டித் தேர்வுகள், அரசு வேலை முயற்சிகளில் வெற்றி வாய்ப்பு உண்டு. பல வழிகளில் பணவரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு, ஆன்மீக பயணம், திருமணத் தடைகள் நீங்குதல் மற்றும் முதலீடுகளில் லாபம் கிடைக்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).