அமோக விளைச்சல் தரும் சனி பகவான்.. புதனுடன் இணைவதால் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
ஜோதிட சாஸ்த்திரங்களில் சனி பகவானின் நகர்வு கூர்ந்து கவனிக்கப்படுகிறது. ஏனெனின் இவரின் நகர்வின் வெளிபாடு 12 ராசியினருக்கும் இருக்கும்.
நவம்பர் 28 ஆம் தேதி சனி பகவானும், நவம்பர் 30 ஆம் தேதி புதனும் வக்ர நிவர்த்தி அடையவுள்ளதாக கணிப்பு வெளியாகியுள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் பெயர்ச்சி குறிப்பிட்ட சில ராசியினரின் வாழ்க்கையில் அமோகமான மாற்றங்களை கொண்டு வரப்போகிறது.
நமக்கு ஒரு நல்ல காலம் பிறக்காதா? என ஏக்கத்துடன் இருக்கும் மக்களுக்கு சனி பகவான் அதிர்ஷ்டங்களை கொட்டிக் கொடுக்கவுள்ளார்.
அந்த வகையில், கிரகங்கள் நிலை மாறினாலே ஏதாவது மாற்றம் கிடைக்கும் என காத்திருக்கும் பக்தர்களுக்க சனி பகவானின் வக்ர நிவர்த்தி என்ன மாதிரியான அதிர்ஷ்டங்களை கொடுக்கப்போகிறது என பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

| மகர ராசிக்கு வெற்றியா? | மகர ராசியினரின் 3 வீட்டில் சனியும், 11 ஆவது வீட்டில் புதனும் வக்ர நிவர்த்தி அடைவதாக ஜோதிடம் கூறுகிறது. இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு வழக்கமாக இருந்த தைரியத்தை விட இந்த நாட்களில் கொஞ்சம் தைரியம் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை என புலம்புபவர்களை பார்த்து நல்ல காலம் பிறந்து விட்டது என சொல்லுங்கள். அந்தளவிற்கான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் வரும். |
| கும்ப ராசிக்கு என்ன மாற்றம்? | கும்ப ராசியினருக்கு 2 ஆம் வீட்டில் சனியும், 10ஆவது வீட்டில் புதனும் பெயர்ச்சியடைகிறார்கள். இதன் விளைவாக பணம் விடயத்தில் கூடுதல் கவனம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களை அறியாமல் சில வெற்றி கைசேரும். புதிய பாதை திறக்கும், அதனால் நம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள். நீங்கள் இழந்த கௌரவம் உங்கள் வீடு தேடி வரும். |
| மிதுன ராசிக்கு அதிர்ஷ்டம் தான் | மிதுன ராசியில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் 10 ஆவது வீட்டில் சனியும், 6 ஆவது வீட்டில் புதனும் வக்ர நிவர்த்தி அடைகிறார்கள். வேலை மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவு மாற்றங்கள் நடக்கும். எப்போதும் போன்று அல்லாமல் சனி பகவானின் அருள் உங்கள் மீது பட்டு நல்லபடியாக வாழ ஆரம்பிப்பீர்கள். நீதிமன்றத்தில் வழக்குகள் சென்றுக் கொண்டிருந்தால், உங்களை அறியாமல் உங்களுக்கு வெற்றி உண்டாகும். |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).