கும்பத்தில் நேரடியாக நகரும் சனி: அட்டகாசமான பலன்களை அனுபவிக்கப்போகும் 3 ராசியினர் யார் யார்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில் சனி கிரகத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்களுக்கும் சாஸ்திரங்களில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
காரணம் சனிபகவான் நீதியின் கடவுளாக பார்க்கப்படுகின்றார். இவர் ஒருவர் செய்யும் நன்மை மற்றும் தீமைகளுக்கு ஏற்ற பலன்களை நிச்சயம் கொடுத்தே தீருவார்.

சனி பகவான் ஒருவர் மீது தீய பார்வையை செலுத்தினால் அவர்களின் வாழ்வே பாழாகிவிடும் என்பது ஐதீகம். அதனால் தான்  சனிபெயர்ச்சிக்கு அனைவரும் பயப்படுகின்றார்கள். 
சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவதற்கு சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்வார்.
இந்த காலகட்டத்தில், சனி அதன் மூல திரிகோண ராசியான கும்பத்தில் இருக்கும் சனிபகவான் மார்ச் 2025 வரை அதே ராசியில் இருப்பார். கும்பத்தில் இருந்தாலும் , சனி அவ்வப்போது தனது நிலையை மாற்றிக் கொண்டே இருப்பார்.

இதன் பிரகாரம் 29 ஜூன் 2024 அன்று கும்ப ராசியில் சனிபகவான் பின்வாங்கினார், அதேபோல 15 நவம்பர் 2024 அன்று, மாலை 05:09 மணிக்கு கும்ப ராசியில் சனிபகவான் நேரடியாக நகரப்போகின்றார். தனது சொந்த ராசியான கும்பத்தில் சனியின் தாக்கம் நேரடியாக இருக்கப்போகின்றது.
குறித்த சனி மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க ஏற்ற தாழ்வுகளை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதக பலன்களை வாரி வழங்கப்போகின்றார். அப்படி அதிர்ஷ்ட பலன்களை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

சனிபகவான் கும்ப ராசியில் நேரடியாகத் திரும்புவதால், குறி்த்த பெயர்ச்சி மிதன ராசியினர் வாழ்வில் பல்வேறு வகையிலும் சாதக மா்றறங்களை கொடுக்கப்போகின்றது.
மிதுன ராசியின் ஒன்பதாம் வீட்டில் சனிபகவான் வருகிறார் அதனால் தொழி்ல் விடயங்களில் இந்த காலகட்டத்தில் உச்சகட்ட வளர்ச்சி ஏற்படபோகின்றது. மேலும் நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் தொல்லைகளில் இருந்து விடுதலை கிடைக்கப்போகின்றது.
எதிர்பாதர வகையில் பணவரவு அதிகரிக்கும் பல்வேறு வழிகளிலும் வருமானம் கிடைக்கப்போகும் நல்ல காலகட்டமாக இது அமையப்போகின்றது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மேஷம்

கும்ப ராசியில் சனிபகவான் நேரடியாகச் சஞ்சரிப்பதால் மேஷ ராசியினர் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள்.
இந்த காலகட்டத்தில் அவலர்களின் மனவலிமை மற்றும் தன்னநம்பிக்கை உச்ச அளவில் செயற்படுவதால் இவர்கள் கால் பதிக்கும் சகல துறைகளிலும் வெற்றிகள் குவிய ஆரம்பிக்கும்.
நிதி நிலையில் சிறந“த முன்னேற்றம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது. பல வழிகளிலும் நிதி ஆதாயம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் தானாகவே அமையும்.
நீண்ட காலமாக தொழில் விடயங்களில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு வெற்றியகரமான தீர்வை காண்பீர்கள்.
மகரம்

கும்ப ராசியில் சனிபகவான் நேரடியாக தாக்கம் செலுத்துவது மகர ராசியினருக்கு பொன் பொருள்களை குவிக்கும் பொற்காலமாக அமையப்போகின்றது.
வாழ்வில் இதுவரை காலமும் இருந்துவந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் மகிழ்ச்சிகரமாக முடிவு கிடைக்கும்.அதனால் குடும்பததில் மகிழ்ச்சி அதிகதிக்கும்.
பண வரவு மற்றும் உடல் ஆரோக்கியம் என்பற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மொத்தத்தில் இந்த காலகட்டம் மகர ராசியினருனக்கு பொற்காலமாக அமையப்போகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        