சரிகமப (5) - இல் மனம் வருட பாடிய போட்டியாளர்... நடுவர் கொடுத்த பணப்பரிசு
சரிகமபவில் Dedication சுற்றில் தன் தந்தையை நடவர் சிம்மாசனத்தில் அமரவைத்து மனம் வருட பாடிய போட்டியாளரின் காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
சரிகமப
ரிகமப நிகழ்ச்சியில் பல்வேறு திறமைகள் கொண்ட போட்டியாளர்கள் சிறப்பாகப் பங்கேற்று வருகின்றனர். நிகழ்ச்சியின் விதிமுறைகளுக்கேற்ப சில போட்டியாளர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் “டெடிகேஷன் சுற்று” எனும் புதிய கட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இந்த சுற்றில், ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு முக்கியமான நபர்களுக்கோ, மனதிற்கு நேசியானவர்களுக்கோ அல்லது நன்றியுடன் நினைவுகூரவேண்டியவர்களுக்கோ ஒரு பாடலை தேர்வு செய்து, அந்த பாடலை பாடி அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றனர்.
இது, இசை மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சிப் பூர்வமான கட்டமாக அமைந்துள்ளது.
அந்த வகையில் போட்டியாளர் செந்தமிழன் தனது தந்தைக்காக பாடல் பாடி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார். இதில் நடுவர் ஸ்ரீனிவாஸ் போட்டியாளருக்கு பணப்பரிசும் கொடுக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |