சரிகமப - வில் இறுதிச்சுற்றுக்கு எதிர்பாராமல் தெரிவான 2 போட்டியாளர்கள்
சரிகமப வில் எதிர்பாராத தருணத்தில் இரண்டு இறுதிச்சுற்று போட்டியாளர்கள் தெரிவு செய்யபட்டுள்ளனர்.
சரிகமப
சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளத்தையும் தன் பக்கம் இழுத்து வைத்துள்ள நிகழ்ச்சி என்றால் அது சரிகமப நிகழ்ச்சி தான்.
பல சுற்றுக்களை கடந்து வந்து தற்போது இறுதிச்சுற்றை வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்துள்ளது. சரிகமப வில் இந்த வாரம் ஐந்தாவது இறுதிச்சுற்று போட்டியாளர் தெரிவு செய்யப்பட்டார்.

ஐந்தாவது இறுதிச்சுற்று வரைக்கும் தான் போட்டியாளர்கள் தெரிவு செய்யப்படுவார் என நினைத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் எதிர்பாராமல் ஆறாவது போட்டியாளரும் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகி இருக்கின்றார்.
போட்டியாளர் சிவானி 'மையா மையா' என்ற பாடலை பாடி ஐந்தாவது இறுதிச்சுற்று போட்டியாளராக தெரிவாகி இருந்தார். அடுத்து மக்கள் வாக்குப்படி சரிகமப இறுதிச்சுற்றுக்கு பவித்ரா திடீரென நடுவர்களால் ஆறாவது இறுதிச்சுற்று போட்டியாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த சரிகமப நிகழ்ச்சியில் பங்கு பற்றிய போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் திறமைவாய்ந்தவர்கள். எல்லோருக்கும் இந்த மேடைக்கு ஒரு கனவுடன் தான் வருவார்கள்.
தற்போது தெரிவாகி இருக்கும் இறுதிச்சுற்று போட்டியாளர்களை தவிர மற்றவர்களும் திறமைகளுக்கு சலித்தவர்கள் இல்லை. இந்த நிலையில் இந்த சரிகமப சீனியர் சீசன் 5 இன் டைடில் வின்னர் யார் வருவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |