சரிகமப சீசன் 3 இறுதிப்போட்டியின் முதல் வெற்றியாளருக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு?
சரிகமப சீசன் 3 இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் முதல் போட்டியாளருக்கு கிடைக்கப் போகும் பணப்பரிசுத் தொகை தற்போது வெளியாகியுள்ளது.
சரிகமப சீசன் 3
பிரபல தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களை களை கடந்து 3ஆவது சீசனாக தற்போது நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப நிகழ்ச்சி.
இது ஒரு பாடல் நிகழ்ச்சி இந்நிகழ்ச்சிக்கு இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இருந்து பலர் தன் பாடும் திறமையை வெளிப்படுத்த இந்நிழச்சிக்கு வந்திருக்கிறார்கள்.
கடந்த வருடம் டிசம்பர் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி இன்று இறுதிப் போட்டிக்கு வந்து நிறைவடையவுள்ளது. இந்நிகழச்சியை அர்ச்சனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஸ்ரீநிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ் ஆகியோர் நடுவர்களாக இருந்து வருகிறார்கள்.
இறுதிப் போட்டி
இந்நிகழச்சியானது பல போட்டியளார்களும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது அக்ஷயா, ஜீவன், புருஷோத்தமன், லக்ஷனா, ராகவர்ஷினி மற்றும் நாகார்ஜுனா என 6 போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வாகி இருக்கிறார்கள்.
மேலும், இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சென்சேஷனல் பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகர் சந்தானம், ஜெயம் ரவி என பலர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் இந்நிகழ்ச்சியில் மூன்றாம் இடம் பிடிக்கும் போட்டியாளருக்கு 3 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு 5 லட்சம் ரூபாயும், முதலிடம் பெறும் போட்டியாளருக்கு 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் புருஷோத்தமன் முதலிடத்தையும், ராகவர்ஷினி இரண்டாம் இடத்தையும் லக்ஷனா மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |