உங்க கணவர் கோவிச்சிக்க மாட்டரே.. மேடையில் கலாய்த்த SPB- குறும்பட போட்டு காட்டிய சரிகமப
“உங்க கணவர் கோவிச்சிக்க மாட்டரே.. ” என பாடகி சைந்தவியை SPB கலாய்த்த காணொளியொன்று சரிகமப மேடையில் போட்டு காட்டப்பட்டுள்ளது.
பாடகி சைந்தவி
தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல பாடகிகளில் ஒருவர் தான் பின்னணி பாடகி சைந்தவி.
இவர் பள்ளிக் காலத்திலிருந்து இசை மீது பாரிய பற்றுக் கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் “சரிகமப” நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
அத்துடன் இவர் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ் குமாரின் முன்னாள் மனைவி ஆவார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையொன்றும் இருக்கின்றது.
கருத்து வேறுபாடு காரணமாக ஜிவி. பிரகாஷ் - சைந்தவி இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பிரிந்து வாழ்ந்தாலும் இவர்கள் சேர்ந்து பாடிய பாடல்கள் இன்றும் ஒலித்து கொண்டு இருக்கின்றன.
SPB உடன் சைந்தவி
இந்த நிலையில் சரிகமப நிகழ்ச்சியில் SPB உடன் சைந்தவி பாடிய பழைய காணொளியொன்று ஒளிபரப்பட்டது.
அந்த காணொளியில், சைந்தவி மேடையில் பாடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். அப்போது SPB எனக்கு ஆங்கிலம் படிக்க தெரியாது என நக்கலாக பேசியிருப்பார். அத்துடன் “ உங்க கணவர் கோவிச்சிக்க மாட்டரே.. ” என்றும் சைந்தவியிடம் கேட்டிருப்பார்.
இந்த காணொளியை பார்த்த சைந்தவி அவரின் நினைவுகளை பகிர்ந்தார்.
மேலும், அரங்கத்திலிருந்த பார்வையாளர்கள் மற்றும் பிரபலங்கள் கண் கலங்கியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |