சரிகமப-வில் காந்த குரலால் பாடி அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்திய போட்டியாளர்

Pavi
Report this article
சரிகமபவில் போட்டியாளர் திவினேஷ் பாடிய பாடல் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசைநிகழ்ச்சியாக இருப்பது சரிகமப நிகழ்ச்சி தான். இதில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளரும் சிறப்பான பாடலை பாடியிருந்த நிலையில் சிலர் போட்டியை விட்டு வெளியேறி சென்றனர்.
இந்த நிலையில் போட்டியாளர் திவினேஷ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற போட்டியாளராவார். இதுவரை இரண்டு இறுதிச்சுற்று போட்டியாளர் தெரிவாகி இருந்த நிலையில் திவினேஷ் தெரிவாகப்படவில்லை.
இந்த சுற்றில் போட்டியாளர்கள் அனைவரும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பாடலை சிறப்பாக பாடியுள்ளனர். எங்கே செல்லும் இந்த பாதை என்ற பாடலை பாடி அனைவரையும் ஈர்த்துள்ளார்.
இதன்போது நடுவர் ஸ்ரீனிவாஸ் மேடைக்கு வந்து பாராட்டிய தருணம் அரங்கத்தில் அனைவரும் கண்கலங்க வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |