சரிகமப - வில் பூமாலையே பாடலை அசல் போல் பாடிய போட்டியாளர்கள்
சரிகமப வில் இந்த வாரம் சரிகமப சங்கமம் நடைபெறுவதால் இதில் பழைய போட்டியாளர்கள் மற்றும் சீசன் 5 போட்டியாளர்கள் பங்கு பற்றி உள்ளனர்.
சரிகமப சங்கமம்
சரிகமப நிகழ்ச்சியில்கடந்த வாரம் Tentkotta சுற்று நடைபெற்றது. அதில் போட்டியாளர்கள் மிகவும் சிறப்பாக பாடி இருந்தனர். இந்த நிலையில் இந்த வாரம் சரிகமப சங்கமம் நடைபெற உள்ளது.
இந்த சரிகமப சங்கமத்தில் பழைய போட்டியாளர்கள் புதிய போட்டியாளர்களுடன் கலந்து பாடுவார்கள். இது ஒவ்வொரு சரிகமப சீசனிலும் நடைபெறும் ஒரு சுற்றாகும்.
இந்த சுற்றில் போட்டியாளர்கள் பழைய போட்டியாளர்களுக்கு ஈடுகொடுத்து பாடுவார்கள்.

இதுவரை வெளியாகிய காணொளிகளில் தற்போது வெளியாகிய காணொளி எல்லோருக்கும் ஆவ்வரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
“பூ மாலையே தோள் சேரவா” இந்த பாடலை இசை ஞாம்பவான் Ilaiyaraaja, மற்றும் S. Janaki பாடி உள்ளனர். இந்த பாடல் ஒரு அரங்கில் பாடுவது என்றால் மிகவும் கடினம்.
அதை தான் சரிகமப சீசன் 3 ருத்ரேஷீம் சீசன் 5 போட்டியளாரும் இணைந்து பாடி அசத்தி உள்ளனர்.
இது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றது. இந்த பாடலை கேட்டு நடுவர்கள் ஆழ்ந்து ரசித்ததை காணொளியில் பார்க்க முடிந்தது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |