சரிகமப Li'l Champs Season 5: இனி Performance வெறித்தனமா இருக்கும்! வைரலாகும் promo
பிரபல தொலைக்காட்சியில் சரிகமப Li'l Champs Season 5 ஆரம்பமாகியுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக, மெஹா ஓடிசனில் போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு வந்தார்கள்.
அதில் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்களுடன் இந்த வாரம் சரிகமப Li'l Champs Season 5 வெற்றிகரமாக தனது முதல் எப்பிசோடை Introduction Round உடன் ஆரம்பிக்கவுள்ளது.

இதன் promo காணொளி தற்போது அட்டகாசமாக சில காட்சிகளுடன் வெளியாகி இணையத்தில் வைராலாகி வருகின்றது.
சரிகமப Li'l Champs Season 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப.

அதன் ஒரு சீசன் சீனியர்களுக்கும் அடுத்த சீசன் ஜூனியர்களுக்கும் மாறி மாறி நடத்தப்படுவது வழக்கம்.
அந்தவவையில், தற்போது சரிகமப சீனியர் சீசன் 5 மாபெரும் இறுதிச் சுற்றுடன் கடந்த 23 ஆம் திகதி வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.அதில் சுஷாந்திகா டைட்டில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து, சரிகமப Li'l Champs நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், தனது 5 ஆவது சீசனை ஆரம்பித்துள்ளதுடன் போட்டியாளருக்கான தெரிவுகள் கடந்த வாதரங்களில் இடம்பெற்று வந்தது.
இந்த ஓடிசனில் கலந்துகொண்ட அனைத்து சிறுவர்களும் திறமைமிக்க பாடகர்களாக இருப்பதால் எத்தனை பேரை தெரிவு செய்வது என்பது நடுவர்களுமே பெரும் சாவாலான விடயமான அமைந்தது.

இந்நிலையில் ஒருவழியாக சரிகமப Li'l Champs சீசன் 5 இற்கான top 25 போட்டியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு இந்த வாரம் முதல் எப்பிசோட்டாக Introduction Round ஒளிபரப்பாக இருக்கின்றது.
சிறுசர்களை கவரும் அசத்தல் ஏற்பாடுகளுடன் பிரம்மாண்டமாக ஆரம்பமாகவுள்ள இந்த சீசனுக்கான முதலாவது promo காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் அசுர வேகத்தில் பார்வையாளர்களை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |