சரிகமப-வில் முதியோர் இல்லத்திற்கே உயிர் கொடுத்த போட்டியாளர்: கண்கலங்க வைத்த காட்சி
சரிகமபவில் போட்டியாளர் திவினேஷின் பாடலால் மனமுருகி முதியோர்கள் செய்த செயல் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
சரிகமப
தற்போது சரிகமப இறுதிக்கட்டத்தை நெருங்கி விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருக்கின்றது. இதில் ஆரம்ப கட்டத்தில் இருந்து இப்போது வரை பாடிய அனைத்து போட்டியாளர்களும் திறமைசாலிகள் தான்.
அந்த வகையில் தற்போது மூன்று இறுதிச்சுற்று போட்டியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்த வாரம் நான்காவது போட்டியாளர் தெரிவு செய்யப்பட உள்ளார்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் மக்கள் மனம் கவர்ந்த போட்டியாளராக இருப்பவர் தான் போட்டியாளர் திவினேஷ். இந்த வாரம் போட்டியாளர் திவினேஷ் பாடல் திறமைக்கு முதியோர் இல்லத்தில் இருந்து வந்த அனைவரும் மரியாதை செலுத்தி இருந்தனர்.
பொதுவாக சிறியவர்கள் தான் பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்குவார்கள். ஆனால் தற்போது சரிகமப நிகழ்ச்சியில் நடைபெற்ற சம்பவம் மக்கள் மனமுருக்கி உள்ளது.
அந்த பெரியவர்கள் போட்டியாளர் திவினேஷ் பாடிய பழைய பாடலில் தங்கள் கவலைகள் மறந்து மனம் உருகியதால் திவினேஷ் கால்களில் விழுந்து வணங்கிய காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க செய்தது. இது சரிகமப நிகழ்ச்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றால் மிகையாகாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |