சரிகமப-வில் உணர்ச்சி தழும்ப பாடிய போட்டியாளர்: மெய்சிலிர்த்த தருணம்
தற்போது பக்தி திருவிழா சுற்றில் போட்டியாளர் மெய்சிலிர்க்க பாடிய பாடலின் காணொளி வெளியாகி உள்ளது.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசை நிகழ்ச்சியாக உள்ளது.
இதில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களும் தங்கள் சிறப்பை மக்களுக்கு காட்டி மகிழ்ச்சிபடுத்தி வந்தனர். எனினும் நிகழ்ச்சியின் சட்டதிட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு வாரமும் மக்களால் குறைந்த வாக்கு பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
கடந்த வாரம் போட்டியில் இருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை. இதனை தொடர்ந்து இந்த வாரம் தங்களின் ஊர் திருவிழாவை நினைவில் கொண்டு பக்தி திருவிழா சுற்று ஆரம்பமாக உள்ளது.
இதில் போட்டியாளர்கள் தங்கள் ஊர்த்திருவிழாவை கொண்டாடி பாடுவார்கள்.
இந்த நிலையில் போட்டியாளர் திவினேஷ் “கல்லானாலும் பழமுதிர் சோலையில் கல்லாவேன்” என்ற பாடலை பாடி அனைவரிடமும் பாராட்டு பெற்றுள்ளார். இது இன்று தொலைக்காட்சியில் முழுமையாக ஒலிபரப்பபடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
