சரிகமப-வில் மக்கள் எதிர்பார்பின்படி மூன்றாவதாக இறுதிச்சுற்றுக்கு தெரிவான போட்டியாளர் யார்?
கடந்த வாரத்தின் முடிவில் மூன்றாவது இறுதிச் சுற்று போட்டியாளராக தெரிவானது யார் என்பது குறித்த தகவலை பார்க்கலாம்.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசைநிகழ்ச்சியாக இருப்பது சரிகமப நிகழ்ச்சி தான். இதில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளரும் ஒருவருக்கொருவர் மிகவும் திறமைசாலிகள்.
இதுவரை இறுதிச்சுற்றுக்கு இரண்டு போட்டியாளர்களான ஹேமித்ரா, ஸ்ரீமதி தெரிவாகியிருந்தனர். இதனை தொடர்ந்து நேற்று மூன்றாவது போட்டியாளர் தெரிவு செய்யப்பட இருந்தார்.
இந்த நிலையில் கோல்டன் பெர்போமன்ஸ் பெற்ற அனைத்து போட்டியாளர்களும் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.
அதில் யோகஸ்ரீ, அபினாஷ் மற்றும் திவினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் இந்த மூவரில் இருந்து ஒருவர் 3 வது இறுதிச்சுற்று போட்டியாளராக தெரிவு செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் கடந்த வாரத்தின் சுற்று நேற்று முடிவடைந்த நிலையில் யோகஸ்ரீ மூன்றாவது போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். அடுத்த வாரம் நான்காவது போட்டியாளர் தெரிவு செய்யப்படுவார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
