சரிகமப - வில் ஒலித்த இலங்கை சிறுமியின் குரல்... தெரிவு செய்யப்பட்டாரா?
சரிகமப லிட்டில் சாம்ஸ் இல் இலங்கையை சேர்ந்த போட்டியாளர் வர்ஜா பாடிய பாடல் அரங்கத்தில் இருந்த அனைவரையும் ஈர்த்துள்ளது.
சரிகமப லிட்டில் சாம்ஸ்
தற்போது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக அறியப்பட்டு வரும் நிகழ்ச்சி என்றால் அது சரிகமப நிகழ்ச்சி தான்.
இதில் சமீபத்தில் தான் சீசன் 5இற்கான சீனியர் சீசன் முடிவு பெற்றது. இதில் டைடில் வின்னராக சுசாந்திக்கா தேர்வு செய்யபட்டார்.
அதுத்து இலகையை சேர்ந்த சபேசன் இண்டாவது போட்டியாளராக தேர்வு செய்யபட்டார்.

மூன்றாவது போட்டியாளராக சின்னு செந்தமிழன் தேர்ந்தெடுக்கபட்டார். இ்ந்த நிலையில் கடந்த 6ம் திகதி சரிகமப லிட்டில் சாம்ஸ் ஆரம்பிக்கபட்டது. இதில் போட்டியாளர்கள் சிறப்பாக பாடி வருகின்றனர்.
இதில் தற்போது வரைக்கும் அனைத்து போட்டியாளர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை திருகோணமலை சேர்ந்த சிறுமி வர்ஜா எனும் போட்டியாளர் சரிகமப மேடைக்கு வந்திருந்தார்.
அவருடைய அப்பா கணித பாட ஆசிரியராக இருப்பதாக கூறினார். பின்னர் சபேஷன் அந்த சிறுமிக்கு வாழ்த்து சொல்லி அவரை நன்றாக பாடு என கூறினார்.

வர்ஜா மல்லிகையே பாடலை பாட ஒவ்வொரு சங்கதிக்கும் நடுவர்கள் தொடக்கம் அரங்கத்தில் இருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
இதன் பின்னர் நடுவர் சைந்தவி வர்ஜாவிற்கு மெடல் அணிவிப்பதற்காகவும்,ஸ்வேதா மோகன் கோர்ட் அணிவிப்பதற்காகவும் மேடைக்கு எழுந்து வந்தனர்.
இதன்போது மேடைக்கு சபேசனும் வந்து பாராட்டுக்களை தெரிவித்து இருந்தார். அதன் பின்னர் வர்ஜாவிற்கு ஸ்வேதா மோகன் நீ இறுதிச்சுற்று மேடையில் பைனலிஸ்ட் ஆக இருப்பது எனக்ககு தெரிகிறது.

நீ அவ்ளோ அழகாக பாடுற என வாழ்த்து தெரிவித்தார். பின்னர் சைந்தவி உங்களுக்கு இரண்டு பாடல்கள் இருக்கு தானே இன்னுமொரு பாடல் பாட முடியுமா உன் குரலில் கேட்க ஆசையாக இருக்கிறது என கூறினார்.
வர்ஜா மன்னவமே பாடலை மிகவும் அழகாக பாடினார். பின்னர் வர்ஜாவிற்கு வாழ்த்து கூறி அனைவரும் சென்றனர். தமிழர்கள் அனைவரும் முக்கியமாக ஈழத்தமிழர்கள் அனைவரும் வர்ஜாவிற்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |