சரிகமப-வில் இசையமைப்பாளர் கங்கைஅமரனையே ரசிகனாக்கிய போட்டியாளர்
சரிகமபவில் இந்த வாரம் மறைந்த இசை ஜாம்பவான்களின் சுற்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர் திவினேஷ் அசத்தலான பாடலை பாடி இசையமைப்பாளரையே கவர்ந்துள்ளார்.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசை நிகழ்ச்சியாக உள்ளது. இதில் போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான பாடல் திறமையை காட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் பல மக்களுக்கு பிடித்த சுவாரஸ்யமான சுற்றுக்களை கொடுக்கும் சரிகமப இந்த வாரம் clebrating legens சுற்று ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் பல இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களின் பாடல்களை போட்டியாளர்கள் சிறப்பாக பாடி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் கங்கை அமரன் அழைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது வெளியான காணொளியில் போட்டியாளர் திவினேஷ் தன்னுடைய பாடலால் கங்கை அமரனையே கவர்ந்துள்ளார்.
திவினேஷீடன் கங்கை அமரன் சேர்ந்து பாடுவதாக ஆசைப்பட்டு இருவரும் சேர்ந்து பாடல் பாடுகின்றனர். இது திவினேஷீக்கு மிகப்பெரிய ஆசிர்வாதம் என நடுவர்கள் பாராட்டுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |