சரிகமப-வில் ஆரம்பமாகும் பக்தி பாடல்கள் சுற்று... பரபரப்பாக பாடும் போட்டியாளர்கள்
சரிகமப வில் தற்போது டூயட் சுற்று முடிவடைந்து பக்தி பாடல்கள் சுற்று ஆரம்பமாக உள்ளது. இதற்கான ப்ரொமொ தற்போது வெளியாகி உள்ளது. இதில் போட்டியாளர்கள் சிறப்பாக பாடுவதை அவதானிக்க முடியும்.
சரிகமப
தற்போது சரிகமப வில் லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 4 நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் 26 போட்டியாளர்கள் பங்குபற்றி இருந்த நிலையில் இதில் நான்கு போட்டியாளர்கள் கடந்த வாரம் போட்டியை விட்டு வெளியேறி சென்றனர்.
சென்ற வாரம் டூயட் சுற்று நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் சிறப்பான திறமையை காட்டி வந்தனர். இந்த நிலையில் போட்டியாளர்களின் திறமைகளை சோதிக்க பக்தி பாடல்கள் சுற்று இந்த வாரம் ஆரம்பிக்கப்பட உள்ளது.
பக்தி பாடல் பாடுவதற்கு ஒரு தனிப்பட்ட திறமை வேண்டும். என்ன தான் பாடும் திறமை இருந்தாலும் அந்த பாடலில் பக்தி நிறைந்திருக்க வேண்டும்.
அந்த வகையில் இந்த பக்தி பாடல் சுற்றில் சிறப்பான பாடகர்கள் யார் யார் என்பதையும் கடவுளின் மீது பக்தி உண்டாகும்படி யார் பாடப்போகின்றனர் என்பதையும் இந்த வாரம் பார்க்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |