சரிகமப-வில் புள்ளிகளின்படி கண்ணீருடன் வெளியேறி சென்ற 2 போட்டியாளர்கள்
இந்த வாரம் நடைபெற்ற சரிகமப நிகழ்ச்சியில் மிகவும் குறைவான புள்ளிகளை பெற்ற போட்டியாளர்கள் இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது பற்றி இங்கே பார்க்கலாம்.
சரிகமப
இசை என்பதற்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை. இதற்கு ஏற்றதை போல சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மனதில் ஒரு தீராத இடத்தை பிடித்து வைத்துள்ளது.
பிரபல டிவி நிகழ்ச்சியில் பல இசைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்று வந்தாலும். சரிகமப நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவெற்பு இருக்கின்றது.
தற்போது சரிகமப லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதில் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறப்பான போட்டியை வெளிக்காட்டி வருகின்றனர்.
பல கஷ்டமான போட்டிகளை கடந்து பல ர் போட்டியை விட்டு வெளியேறி தற்போது Town Bus Round நடைபெற்று முடிந்தது. இதில் எல்லா குழந்தைகளும் தங்களின் சிறப்பான பாடல் திறமையை காட்டி இருந்தனர்.
இருந்தும் நிகழ்ச்சியின் கட்டாய கட்டுபாட்டின்படி போட்டியை விட்டு புள்ளிகளின் அடிப்படையில் போட்டியாளர்களை வெளியேற்ற வேண்டும். கடந்த நான்கு வாரங்களாக எந்த ஒரு எலிமினேஷனும் நடைபெறவில்லை.
ஆனால் புள்ளிகள் கணக்கிடப்பட்டு வந்தன. இதுவரை போட்டியாளர்கள் வாங்கிய புள்ளிகளின் அடிப்படையில் நான்கு போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இதில் யோகேஸ்வரன், யாதவி என்ற இரண்டு போட்டியாளர்கள் சேவ் செய்யபட்டனர். இன்றைய இரண்டு போட்டியாளர்களான அபிரூப், கர்ஷிகா போட்டியை விட்டு விலகி சென்றனர். இவர்களை அரங்கமே எழுந்து நின்று மரியாதை செலுத்தி அனுப்பி வைத்தனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |