சரிகமப திவினேஷ் பாட அழுத பிரபலம் - ஸ்ரீனிவாஸ் கூறியது உண்மைதானோ
பிரபல தொலைக்காட்சி அவார்ட் நிகழ்ச்சியில் மக்களால் மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சியாக சரிகமப நிகழ்ச்சி தெரிவு செய்யப்பட்டது. இதில் போட்டியாளர் திவினேஷ் பாடிய பாடல் அனைவரையும் ஈர்த்து இருந்தது.
சரிகமப சிறப்பு நிகழ்ச்சி
சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக வலம் வந்து கொண்டு இருக்கின்றது. இதுவரை மொத்தம் நான்கு சீசன்கள் முடிந்து தற்போது ஐந்தாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஐந்தாவது சீசனிலும் தற்போது இறுதிச்சுற்றுக்கு போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட இருக்கின்றனர். அந்த வகையில் விருதுகள் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் மிகவும் அதிகமாக விரும்பப்ட்ட நிகழ்ச்சியாக இருந்தது சரிகமப நிகழ்ச்சி தான்.

இதற்கான விருதை வழங்க கங்கை அமரன் அவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டனர். பின்னர் சரிகமப குழு மேடைக்கு அழைக்கபட்டது.
அதில் சரிகமப சீசன் 4 லிட்டில் சாம்ஸ் போட்டியாளாகள் பாடினார்கள். அதில் திவினேஷ் பாடிய பாடல் அனைவரையும் கவர்ந்தது. இதற்கு நடிகர் கார்த்திக் கண்கலங்கியபடி வாழ்த்தினார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |