சரிகமப தேவயானி மகள் அம்மாவுடன் நல்லா நடிக்கிறாங்களே... வைரலாகும் காணொளி
நடிகை தேவயானி மகளும் தேவயானியும் சேர்ந்து ஒன்றாக நடித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சரிகமப இனியா
சரிகமப மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருாக்கி கொண்டவர் தான் இனியா ராஜகுமாரன். தற்போது தேவயானி மகள் என்பதை விட சரிகமப இனியா என்றால் மட்டுமே பலருக்கும் தெரிகிறது.
அம்மா நடிகை, அப்பா இயக்குனர் என இரத்தத்திலேயே இனியாவுக்கு சினிமா ஜீன் உள்ளது.இருந்தாலும் தனக்கு இசை மீது தான் காதல் அதிகம் என்பதால் அவர் சரிகமப வில கலந்துகொண்டு ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார்.

சமீபத்தில் அவருக்கு பிரபல நாளிதழ் டிஜிட்டல் நிறுவனம் ’தமிழ்நாட்டின் செல்லக் குரல்' விருதையும் வழங்கியது. இனியா, அடுத்து சினிமாவில் நடிக்க போவதாக பல தகவல்கள் இணையத்தில் உலா வந்தன.
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில் இனியா நடிக்க உள்ளார் என்றெல்லாம் தகவல்கள் பரவி வருகின்றது. இந்த நிலையில் தற்போது இனியாவும் அவரது அம்மா தேவயானியும் சேர்ந்து ஒரு விளம்பரத்தை சேர்ந்து நடித்துள்ளனர்.

அந்த விளம்பர வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மணக்கோலத்தில் இருக்கும் இனியாவை, தங்கம் என அழைத்தப்படிய எண்ட்ரி கொடுக்கிறார் தேவயானி.
பின்பு அன்பு மகளுக்கு அழகான தங்க நெக்லஸை பரிசாக தருகிறார். பதிலுக்கு இனியா, என் அம்மா தான் எப்பவும் தங்கம் என்கிறார். இந்த விளம்பரத்தை பார்த்த ரசிகர்கள் இனியா கியூட்டாக இருப்பதாக தகவல் தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |