71 வயதிலும் இளமையாக இருக்க சரத்குமார் மாதிரி சாப்பிடுங்க - தினமும் இந்த ஜூஸ் குடிப்பாராம்
71 வயதிலும் நடிகர் சரத்குமார் கட்டுடலுடன் முகத்தில் அவ்வளவாக சுருக்கம் இல்லாமலும் இருப்பதற்கான காரணத்தை தற்போது பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
சரத்குமார் டயட்
நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் தன் திறமை வாய்ந்த நடிகராவார். அண்மையில் ட்யூட் படம் மூலம் பல வருடங்களுக்கு பின்னர் அனைத்து ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்து இருந்தார் சரத்குமார்.
இதனை தொடர்ந்து விஜயகாந்த்தின் மகன் சண்முகப்பாண்டியன் உடன் இணைந்து கொம்பு சீவி என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் வெளியீடாக வர உள்ளது. சரத்குமாருக்கு தற்போது 71 வயதாகும் நிலையில் அவர் தனது பிட்னஸ் ரகசியத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

டயட் லிஸ்ட்
சரத்குமார் தனது அன்றாட உடற்பயிற்சியில் கார்டியோ பயிற்சிகளைவிடவும் வலிமைக்கான பயிற்சிகளை செய்வாராம். டெட்லிஃப்ட் எனப்படும் அதிக எடை தூக்கும் பயிற்சியைவிட, ஸ்குவாட்ஸ் பயிற்சியையே தனக்கு பிடித்தமான பயிற்சி என்றுள்ளார்.
உடற்பயிற்சி செய்யும்போது எப்போதும் மேல் உடலுக்கு மட்டுமன்றி, மொத்த உடலுக்கும் உடற்பயிற்ச்சி செய்ய வேண்டும் என சரத்குமார் கூறுகிறார்.

உணவு
சரத்குமார் காலையில் எழுந்து அந்த நாளை தொடங்க முன்னர் தண்ணீரில் தொடங்கும் பழக்கத்தை வைத்துள்ளார். தினமும் 2.5 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது சரத்குமார் கூறியுள்ளார்.
தண்ணீருக்கு அடுத்தபடியாக நெய் சேர்க்கப்பட்ட ப்ளாக் காஃபியுடன் நாளைத் தொடங்கும் சரத்குமார், தனக்கென தனியொரு டயட் வைத்துள்ளார்.
காலை 9 மணியளவில் 4 முட்டையின் வெள்ளைப்பகுதி 11 மணியளவில் (ABC) ஆப்பிள், பீட்ரூட், கேரட் சேர்த்து அரைக்கப்பட்ட ஜூஸ், மதிய உணவில் மிளகுத்தூளும் உப்பும் போட்டு 2 சிக்கன் பீஸ் மற்றும் வேகவைக்கப்பட்ட காய்கறிகள் எடுத்துக் கொள்கிறார் சரத்குமார்.

இவற்றை தொடர்ந்து மாலை 4 மணிக்கு வேர்க்கடலை போட்டு அவல் சாப்பிடுகிறார் சரத்குமார். இரவு உணவுக்கு ஏதேனுமொரு சூப் (சிக்கன் / மட்டன்) எடுத்துக் கொண்டு தன் உணவை முடித்துவிடுவாராம்.
தினமும் தீவிரமான உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றாலும்கூட, தினமும் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சியாவது செய்வது மிகவும் அவசியம்.
இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் என்பதால் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என கூறுகிறார் சரத்குமார். நடைப்பயிற்சியும் செய்ய முடியாதவர்கள், உடலுழைப்பு உள்ளபடியான வேலைகளை நாள் முழுக்க அவ்வப்போது செய்து வந்தால் உடல் பிட்டாக மாற்ற முடியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |