விஜே சித்ரா தற்கொலை! பல உண்மைகளை கூறிய நடிகை! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்தது என்ன?
பிரபல தொகுப்பாளர் வி. ஜே. சித்ராவின் தற்கொலை குறித்து அவருடைய தோழியொருவர் கொடுத்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரைக்கு அறிமுகம்
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி சின்னத்திரை மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை சித்ரா.
இவர் ஆரம்பத்தில் நிகழ்ச்சி தொகுப்பில் மட்டும் இருந்தாலும் காலப்போக்கில் நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர் மாற்றமடைந்து விட்டார்.
இதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை கேரக்டர் சித்ராவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது.
தற்கொலை
இந்நிலையில் தன்னுடைய கடின உழைப்பால் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்த சித்ரா திடீரென ஒரு நாள் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இவரின் மரணத்தை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
குறித்த சம்பவம் சித்ரா சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே பெங்களூரு பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் ஹோட்டலில் தன்னுடைய கணவர் ஹேமநாத்துடன் தங்கியிருக்கும் போதே இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து சித்ரா இறந்து சுமார் ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது. ஆனாலும் இவரின் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என கண்டுபிடிக்க முடியாதவொரு நிலை இன்றும் நிலவி வருகிறது.
தோழி சரண்யா பரபரப்பு பேட்டி
மேலும் சித்ராவின் கொலை குறித்து இன்றும் விசாரணை நடைப்பெற்று வருகிறது. இதன்படி, சித்ராவின் நெருங்கிய தோழியான சரண்யா சமிப தினங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சியொன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், “சித்ரா காதலிப்பதாக ஊடகங்களுக்கு கூறிய பின்னர் தான், பாண்டியன் ஸ்டோர்ஸில் அதிகமான லவ் காட்சிகள் வைத்துள்ளார்கள். இதனால் என்னுடைய கணவர் என்னுடன் கடினமாக நடந்துக் கொள்கிறார்.
இதனை நான் யாரிடம் கூற வேண்டும், என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியவில்லை. என சித்ரா புலம்பினார். நானும் சித்ராவிற்கு ஆறுதல் கூறினேன், அவர் அவருடைய கணவருடன் பேசிய ஓடியோக்களை என்னிடமும் போட்டு காட்டினார்.
மேலும் முதலிரவு காட்சிகள் எடுக்கும் போதும் கூட இவர்கள் இருவருக்கும் சண்டைகள் பயங்கரமாக இருந்தது என அழுதப்படி கூறினார்.” என பேட்டியில் ஓடியோவுடன் தெரிவித்தார்.
இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த சித்ராவின் ரசிகர்கள் சித்ராவின் மரணத்திற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் காரணமா என சந்தேகித்த வருகிறார்கள்..