சும்மாதா இருக்கேன்...காமெடி நடிகர் சந்தானத்துக்கு வந்த அழைப்பு! தீயாய் பரவும் வீடியோ
ஆர்யா பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படம் நடிக்க தயார் என்றால் அந்த படத்தில் காமெடியனாக நடிக்க தயார் என்று நடிகர் சந்தானம் பேசிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
ஆக்சன் த்ரில்லர் ஜேனரில் உருவாகி உள்ள கேப்டன் படத்தை ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரித்து உள்ளது.
இதில் ராணுவ அதிகாரியாக ஆர்யா நடித்துள்ளார். இந்த படத்தின் பிரீ ரிலீஸ் ஈவன்ட் சென்னையில் நேற்று நடந்தது.
இதில் சந்தானம், ஆர்யா உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். அப்போது மேடையில் சந்தானம், ஆர்யா பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படம் நடிக்க தயார் என்றால் அந்த படத்தில் காமெடியனாக நடிக்க தயார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்யா எனக்கு போன் செய்திருந்தார்.
அப்போது என்ன செய்கிறாய் என்று கேட்டார்? வீட்டில் சும்மா தான் இருக்கேன் என்று நான் சொன்னேன். உடனே ஆர்யா, சரி இங்கேயும் வந்து சும்மா இருன்னு தான் என்னை அழைத்தார் என்று சந்தானம் கூறினார்.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.