ஜேசன் சஞ்சய்யின் முதல் படம்... நேரில் வந்து வாழ்த்திய அம்மா, சகோதரி - வைரலாகும் காணொளி
ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படமான ‘சிக்மா’ அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதையொட்டி, படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் பார்ப்பதற்காக அவரது தாயார் சங்கீதா மற்றும் சகோதரி திவ்யா நேரில் வந்தனர். குறித்த காட்சிகள் அடங்கிய காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

வைரலாகும் காணொளி
25 வயதான ஜேசன் சஞ்சய் இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தது கவனம் பெற்றுள்ளது. அவர்களுடன் ஜேசனும் திரையரங்கிற்கு வந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் முதல்வர் விஜய் பங்கேற்காத நிலையில், வெளியீட்டு நாளில் ஜேசனுக்கு தனது அம்மாவும் தங்கையும் முழுமையான ஆரவை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேசன் சஞ்சயின் சிக்மா பார்க்க வந்த முதல் அமைச்சர் தளபதி விஜய் மனைவி மகள் 😍🥰🫶 https://t.co/jmDN7PsIHK
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) October 2, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |