சனி வக்கிர பெயர்ச்சி: ஜூலை 27 முதல் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்ட பலன்கள்!
நவ கிரங்களில் சனி பெயர்ச்சிக்கு ஜோதிடத்தில் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. காரணம் சனி ஒருவருடைய பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப பாரபட்சம் இன்றி பலன் கொடுக்கும் நீதியின் தேவன்.
தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வரும் சனி பகவான், வரும் ஜூலை 27 முதல் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இந்த நிலை டிசம்பர் 11 வரை நீடிக்கும். இந்த காலத்தில் குறிப்பாக ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷப ராசிக்கான சிறப்பு பலன்கள்
ஒன்பது கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகம் சனி. சனி ஒரு பாவக் கிரகமாகக் கருதப்படுகிறார். குறிப்பிட்ட காலங்களில் சனி பின்னோக்கி நகர்வது போலத் தோன்றும். இதுவே சனி வக்கிர பெயர்ச்சி எனப்படுகிறது. இந்த காலத்தில் சனியின் கடுமையான தாக்கம் ஓரளவு குறையும். அதனால் நல்ல பலன்கள் அதிகமாகவும், சிரமங்கள் குறைவாகவும் இருக்கும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
ரிஷப ராசியினருக்கு சில பிரச்சனைகள் வந்தாலும், அவற்றின் மூலம் நல்ல பலன்களும் கிடைக்கும். உங்களுக்கு பாக்கியாதிபதியாக இருக்கும் சனி பகவான் பல நன்மைகளை வழங்குவார்.

தற்போது லாப ஸ்தானத்தில் இருக்கும் சனி வக்கிரமாக இருப்பதால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். குருவின் பார்வையும் இருப்பதால் வாழ்க்கையில் பல ஏற்றங்கள் கிடைக்கும்.
குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். உறவுகள் மேம்படும். துணைவர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து பரிசுகள் அல்லது மகிழ்ச்சியான அனுபவங்கள் கிடைக்கும்.
காதல், திருமணம் மற்றும் கல்வி காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் சிறிய கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனால் பிரிந்திருக்கும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேரும் வாய்ப்பும் உருவாகும்.

மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நல்ல கல்லூரி அல்லது விரும்பிய படிப்பில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்கள் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறலாம்.
படிப்பை முடித்தவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. இளையவர்கள் காதல் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு தேர்ச்சியும், அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
லாப ஸ்தானத்தில் சனி இருப்பதால் வாழ்க்கைத் தரம் மேம்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். உங்கள் வசதிக்கேற்ற நிலம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்பு உருவாகும். மொத்தத்தில் சனி வக்ர பெயர்ச்சி ரிஷப ராசியினருக்கு பொற்காலமாக அமைய போகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |