சனியால் 2023ல் எந்த ராசிக்கு பணம் தேடி ஓடி வரும்! ஏழரைச்சனியால் சாவின் கடைசி நுனிவரை பார்க்க போவது யார்?

Horoscope
By Nivetha Aug 06, 2022 05:10 PM GMT
Report

சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு ஜனவரி மாதம் 17ஆம் தேதி தை மாதம் 3ஆம் தேதியன்று இடப்பெயர்ச்சி அடைகிறார்.

இந்த சனிப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது.

சில ராசிக்காரர்கள் ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறார்கள்.

நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சியால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனியால் அவதிப்படபோகும் ராசிகள் யார் யார் என்று பார்க்கலாம்.

சனியால் 2023ல் எந்த ராசிக்கு பணம் தேடி ஓடி வரும்! ஏழரைச்சனியால் சாவின் கடைசி நுனிவரை பார்க்க போவது யார்? | Sani Peyarchi 2022 2023 In Tamil

மேஷம் 

மேஷ ராசிக்காரர்களுக்கு லாப சனி காலமாகும். செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

சனிபகவான் பார்வை உங்க ராசியின் மீது விழுவதும் கூடுதல் பலம். உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். வெளிநாடு செல்வதற்கான யோகமும் கைகூடி வரப்போகிறது. 

 ரிஷபம் 

 சனி பகவான் ரிஷப ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமரப்போவதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். 

ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் கிடைக்கப் போகிறது. சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும். 

மிதுனம் 

 சனியால் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக மிதுன ராசிக்காரர்கள் படாத பாடு பட்டிருப்பீர்கள். அஷ்டம சனி முடிந்து பாக்கிய சனி தொடங்குகிறது. சனியால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். 

அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். நிறைய தான தர்மங்களை செய்யுங்கள். ஏனெனில் இது தர்ம சனி காலம். வேலையில் சம்பள உயர்வு புரமோஷன் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நகை, பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். 

கடகம் 

சனிபகவான் இதுநாள் வரை கண்டச்சனியாக இருந்து கஷ்டங்களைக் கொடுத்தார் இனி எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக அமரப்போகிறார்.

இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். திடீர் பணவரவு வந்து திக்குமுக்காட வைக்கும்.

சிம்மம் 

சனிபகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமரப்போகிறார். சனிபகவான் உங்க ராசியை பார்ப்பதால் கண்டச்சனியையும் கஷ்டமில்லாமல் கடந்துவிடுவீர்கள். வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சனி பகவான் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது.

வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சனியால் மிகப்பெரிய யோகம் தேடி வரப்போகிறது. வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தடைகளை தாண்டி திருமணம் நடைபெறும்.

கன்னி

சனி பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார். சனி பகவான் தனது சொந்த வீட்டுக்கு வருவதால் நோய்கள் தீரும். கடன்கள் கட்டுப்படும். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் கொட்டும்.

சனி ஆறாம் வீட்டு அதிபதி ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். இனி இரண்டரை ஆண்டு காலம் உங்களுக்கு ராஜயோக காலம். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

துலாம்


கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்த உங்களுக்கு இனி நல்லது அதிகம் நடக்கும். சனி உங்களுடைய ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானஅதிபதி என்பதால் நிறைய புண்ணியங்கள் கிடைக்கப்போகிறது. வேலையில் இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும்.

வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு நன்மை தரும் இடமாற்றம் நடைபெறும். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. பணவரவு அதிகமாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி பெறும்.

விருச்சிகம்


சனிபகவான் நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் பாதிப்புகள் இருக்காது. சனி பகவானின் பத்தாவது பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

ஆசைகளை குறிக்கோள்களை சனி நிறைவேற்றுவார். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோஷன் கிடைக்கும். வீடு, கார் என வாங்குவீர்கள். பணவரவும் தனவரவும் அதிகரிக்கும். அர்த்தாஷ்டம சனி காலம் என்பதால் சற்றே கவனமாக இருப்பது அவசியம். 

தனுசு


ஏழரை ஆண்டுகாலமாக சனி பகவான் தனுசு ராசியை ஆட்டி படைத்தார். ஏழரை ஆண்டுகாலமாக துன்பப்பட்டு சாவின் கடைசி நுனிவரை பார்த்து விட்டு வந்திருப்பீர்கள். சனி விலகப்போவதால் இனி நன்மைகள் தேடி வரும் காலம்.

வராத பணம் தேடி வரும் முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். உங்களின் துன்பங்கள், துயரங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. கொடுத்த கடன்கள் வசூலாகும். பயணங்கள் வெற்றியை கொடுக்கும். மன நிம்மதி கொடுக்கும். உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும்.

மகரம்

சனிப்பெயர்ச்சியால் அதிகம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை. தன வருமானமும் லாபமும் கிடைக்கும்.

சனியின் பார்வை உங்கள் ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு,பதினொன்றாம் வீடுகளின் மீது விழுவதால் கஷ்டங்களை எளிதாக கடந்து விடலாம். கால்களில் அடிபடும் என்பதால் கூடுதல் கவனம் தேவைப்படும். விநாயகர் வழிபாடு, அனுமன் வழிபாடு சனியால் ஏற்படும் சங்கடத்தை போக்கும்.

கும்பம்


இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி நடைபெறுகிறது. சனி பகவான் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். வேலை செய்யும் இடத்தில் நிம்மதியை தருவார். அனுபவங்களினால் பக்குவப்படுத்துவார்.

முதல் சுற்றில் உள்ளவர்களுக்கு ஜென்ம சனி மன அழுத்தம், தடுமாற்றங்களை தருவார். உங்கள் ராசிநாதன் என்பதால் அதிக சிரமங்கள் இருக்காது. இந்த சனிப்பெயர்ச்சியை எளிதாக கடந்து விடுவீர்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யுங்கள். முதியோர்களுக்கு தானம் கொடுப்பது பாதிப்பை குறைக்கும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.

மீனம்


2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மீன ராசிக்கு விரைய சனியாக ஏழரை சனி தொடங்குகிறது. விபரீத ராஜயோகத்தையும் தருகிறார் சனி. காரணம் சனி பகவான் உங்க ஆட்சிநாதன்.

சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு செய்வது நல்லது.

இந்த கால கட்டத்தில் பணத்தை பணமாக வைத்திருக்காமல் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். ஏழரை சனி தொடங்குவதால் ஏழைகளுக்கும் முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி செய்வதன் மூலம் பாதிப்பை குறைக்கலாம்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, பூந்தோட்டம்

18 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, வவுனியா

16 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US