திரையரங்கில் சங்கீதா விஜய் காட்டிய செய்கை... மகன் சஞ்சய்யின் படம் எப்படியிருக்கு?
இயக்குனர் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் சங்கீதா திரையரங்கில் காட்டியுள்ள செய்கை ரசிகர்களிடையே பிரபலமாகி வருகின்றது.
இயக்குனர் ஜேசன் சஞ்சய்
பிரபல நடிகரும், தற்போதைய முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். சிக்மா என்ற படத்தினை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாகவும், ப்ரியா அப்துல்லா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படம் தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 9.30 மணிக்கு திரையரங்கில் வெளியாகியுள்ளது.

முதல்வர் விஜய் மகன் ஜேசனின் முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே கடும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளதுடன், இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கிற்கு தாய் சங்கீதா மற்றும் சகோதரி திவ்யா வருகை தந்தனர்.
விஜய் அரசியல் வேலையில் அதிக கவனம் செலுத்திவரும் நிலையில் மகனின் சிக்மா படத்தினை எப்பொழுது பார்ப்பார் என்று ரசிகர்களின் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் மகனின் படத்தை பார்க்க சென்ற சங்கீதா திரையரங்கில் வைத்து ரசிகர்களுக்கு கையசைத்து ஹாய் சொன்னதுடன், கையெடுத்து கும்பிடவும் செய்துள்ளார்.
விஜய் சங்கீதா இருவரது விவாகரத்து விடயம் குறித்து சங்கீதா பதில் எதுவும் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது. மேலும் ஜேசன் எடுத்துள்ள சிக்மா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினையும், கருத்துக்களையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |