ஆண்குழந்தையை பெற்றெடுத்த மனைவி: மகனின் கையைப் பிடித்து சாண்டி வெளியிட்ட காணொளி
டான்ஸ் மாஸ்டர் சாண்டி - சில்வியா தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மானாட மயிலாட நிகழ்ச்சியில் அறிமுகமான சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தினைப் பெற்று புகழின் உச்சத்திற்கு சென்றதோடு, இரண்டாவது இடத்தினைப் பிடித்தார்.
தற்போது படத்தில் ஹீரோவாகவும் நடித்து இவர், உதவி நடன இயக்குனராக இருந்த சில்வியாவை சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், சில்வியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில் கூட தனது மனைவி சில்வியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியை எளிமையாக வீட்டில் கொண்டாடினார்.
இந்த விழாவின் புகைப்படங்களை சாண்டியின் மனைவி சில்வியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் சாண்டி - சில்வியா தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாண்டி வெளியிட்டுள்ளார். மகிழ்ச்சியில் உள்ள சாண்டிக்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.