தன் ஜோடியை வெட்டப்போன கசாப்புக்கடைக்காரர் - ஹீரோ போல் வந்து காப்பாற்றிய சேவல் - வீடியோ!
பாசம் என்பது மிக அற்புதமான உணர்வு. சொந்த குடும்பங்களுக்குள் பாசம் வைப்பது ஒருவகை என்றால் காரணமே இன்றி நமக்கு சக மனிதர்களின் மீதோ, இன்னொரு உயிரினத்தின் மீதே பாசம் நமக்கு வரும்.
அது மிகச்சிறந்த மனிதநேயப் பண்பாக கூட பார்க்கலாம். தன் ஜீவனின் மீது மனிதர்களைப் போலவே ஏனைய உயிரினங்களுக்கும் பாசம் இருக்கும்.
அந்த வகையில், கசாப்பு கடைக்காரர் ஒரு கோழியைப் பிடித்து வெட்ட முயல்கிறார். இதைப் பார்த்ததும் அதன் ஜோடி சேவல் ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டது. அது கூடியவரை அந்த கோழியை விடச் சொல்லிப் போராடுகிறது.
கோழியை வெட்ட விடாமல் தடுக்கவும் செய்கிறது. ஒரு கட்டத்தில் செம கெத்தாக கோழியை வெட்டும் அரிவாளின் மீது ஏறிக்கொண்டு நகராமல் தர்ணாவும் செய்கிறது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ லிங்க் -
https://fb.watch/7RSDN8qtpp/