Samayal Express: பாடகி சைந்தவியின் பாடலுக்கு ஷாலின் சோயா கொடுத்த ரியாக்ஷன்!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2 நிகழ்சியில் இந்த வாரம் போட்டியாளர்களாக பங்கேற்ற பாடகி சைந்தவி தொகுப்பாளினி ஷாலின் சோயாவின் விருப்பத்துக்கு இணங்க பாடல் பாடிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக விளங்கும் Zee தமிழ், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.

அந்த வரிசையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த மக்களின் மனம் கவர்ந்த 'சமையல் எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியின் சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகிவருகின்றது.
கடந்த ஜூலை 6 ஆம் திகதி ஆரம்பமாகிய அந்த நிகழ்சி ஞாயிறு தோறும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனை ஷாலின் சோயா தொகுத்து வழங்க, பிரபல நடிகை சுஜிதா தனுஷ் முதன்மை நடுவராக பங்கேற்று வருகின்றார்.

சமையல் திறமைகளுக்கும், கலகலப்பான போட்டி சூழலுக்கும் இடமளிக்கும் வகையில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி வெற்றிநடை போட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் இந்த வார போட்டியாளராக பங்கேற்ற பாடகி சைந்தவி இசையே இன்றி தனது மெய்சிர்க்க வைக்கும் அழகிய குரலில் பாடி அசத்திய காணொளி தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |