பாட்டி, தாத்தாவின் காதல் கதையை பகிர்ந்த vjஅர்ச்சனா! வைரலாகும் காணொளி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2 நிகழ்சியில் இந்த வாரம் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா மற்றும் அவரது தங்கை அனிதா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் போது, தொகுப்பாளினி அர்ச்சனா தனது பாட்டி தாத்தா மற்றும் அப்பா, அம்மாவின் காதல் கதையை சுவாரஸ்யமான முறையில் பகிர்ந்துக்கொண்ட காட்சியடங்கிய காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக திகழ்ந்து வரும் ஜீ தமிழ், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் சீரியல்கள் மற்றும் ரியாரிட்டி நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது.
அந்த வரிசையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த மக்களின் மனம் கவர்ந்த 'சமையல் எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியின் சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகிவருகின்றது.

கடந்த ஜூலை 6 ஆம் திகதி ஆரம்பமாகிய அந்த நிகழ்சி ஞாயிறு தோறும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்த சீசனை ஷாலின் சோயா தொகுத்து வழங்க, பிரபல நடிகை சுஜிதா தனுஷ் முதன்மை நடுவராக பங்கேற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களாக தொகுப்பாளினி அர்ச்சனா மற்றும் அவரது தங்கை அனிதா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அதன் சில காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும்பாலானர்களின் கவனத்தையும் ஈர்த்துவருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |