ஆண் நண்பருடன் சமந்தா வெளியிட்ட புகைப்படம்... வெளிநாட்டிற்கு சென்றும் இதை விடமாட்டேன்றாங்களே!
நடிகை சமந்தா சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அங்கிருந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கு தற்போது ஹிந்தி என இந்தியளவில் டாப் நடிகையாக ஜொலித்து வருபவர் சமந்தா. இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் திருமணம் நடைபெற்றது.
காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழந்தனர். இதன்பின், கருத்து வேறுபாடு காரணமாக நடிகை சமந்தா - நாகசைதன்யா இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர்.
விவாகரத்துக்கு பின் மயோசிட்டிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது அதிலிருந்து மீண்டு வந்து, பழையபடி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
மயோசிடிஸ் என்ற தசையுருக்கி நோய்க்கு சிகிச்சையளித்து கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்திருக்க முடியும், முழுமையான தீர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
மயோசிடிஸ் நோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகை சமந்தா, அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆண் நண்பருடன் சமந்தா
நடிகை சமந்தா சில மாதங்கள் நடிப்பிலிருந்து விலகி முழு ஓய்வு எடுக்க முடிவு செய்த சமந்தா, சில ஆன்மீக தலங்களுக்கு சுற்றுலா சென்று வருகின்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு குஷி படத்தின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, விஜய் தேவரகொண்டாவுடன் மேடையில் நடமாடினார்.
தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகை சமந்தா, அங்கு ஜாலியாக ஊர் சுற்றி, நண்பர்களோடு அரட்டை அடித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களையும் நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அங்கு சென்றும் ஜிம்மில் உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வருகின்றார். இதனை அவதானித்த ரசிகர்கள் இன்னும் விடவில்லையா? என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற 41-வது இந்திய தின அணிவகுப்பிலும் நடிகை சமந்தா கலந்துகொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |