நோயிலிருந்து மீண்டு வந்த சமந்தா.. காணொளியில் பகிர்ந்த ரகசியம்
நோயிலிருந்து மீண்டு வர சமந்தா என்ன செய்தார்? என்பதனை காணொளியாக பதிவேற்றியுள்ளார்.
சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் சமந்தா.
இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட். இதன் காரணமாக குறைந்த படங்களிலேயே டாப் இடத்தை பிடித்த விட்டார்.
சமந்தா சமிபக்காலமாக திரைப்படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் தன்னுடைய உடல்நிலை குறித்து மிகுந்த கண்காணிப்பில் இருக்கிறார்.
கடந்த 2022இல் மயோசிடிஸ் என்ற அரிய வகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சமந்தா அதற்கு தெரபி சிகிச்சை செய்தாக காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.
தெரபி சிகிச்சை
இந்த நிலையில் நோய் குணமாகி மீண்டும் சினிமாவிற்குள் நுழையும் சமந்தா தோழியுடன் இணைந்து ஹெல்த் தொடர்பாக போட்காஸ்ட் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரபி சிகிச்சை குறித்து விளக்கமான காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த காணொளியை பார்த்த ரசிகர்கள், சமந்தா எப்போதும் தனது உடல்நிலை குறித்து வெளிப்படையாக இருப்பதால் ரசிகர்களும் தெரபி சிகிச்சை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை செய்திருக்கிறார் என முணுமுணுத்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |