கோல்டன் நிற உடையில் சமந்தா வெளியிட்ட கிளாமர் புகைப்படம்
நடிகை சமந்தா கோல்டன் நிற உடையில் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா தற்போது தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் இருந்து வருகின்றார்.
சென்னையில் பிறந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படிப்பை முடித்த அவர் 2010ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து பானா காத்தாடி திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்த இவர் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையானார்.
தெலுங்கு பட நடிகரான நாக சைதன்யா என்பவரை 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா அவ்வப்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றார். குஷி மற்றும் சென்னை ஸ்டோரி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் பிரபல புகைப்பட கலைஞரான வைஷ்ணவி பிரவீன் வெளியிட்டுள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் சமந்தாவின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
தங்க நிற ஆடையை அணிந்து கொண்டு சமந்தா அழகாக போஸ் கொடுக்கும் அந்த போட்டோவிற்கு சமந்தாவின் ரசிகர்கள் பெரும் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
