எனக்கு பொறாமையா? நாக சைதன்யா இரண்டாம் திருமணம் குறித்து சமந்தா நச் பதில்!
நடிகை சமந்தமா நாக சைதன்யா - சோபிதா திருமணம் குறித்து பேட்டியொன்றில் கேட்கபபட்ட கேள்விக்கும் வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் எனும் வெப் தொடர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைரும் அறிந்ததே. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள்.
அண்மையில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.
ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் தன்னை தானே மீட்டுக்கொண்டு கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில் தனது வாழ்க்கைப் பார்வைக் தொடர்பில் பல விடயங்களை சமந்தா பகிர்ந்துள்ளார்.
திருமணம் மற்றும் குழந்தைகள் மட்டுமே பெண்ணின் முழுமைக்குக் காரணம் என்று இந்த சமூகம் கட்டமைத்துள்ளது. ஆனால் அதில் உண்மையில்லை தனிமையிலும் மகிழ்ச்சி சாத்தியம் என குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் திருமணமாகி குழந்தைகள் பெற்று இருந்தால் தான் முழுமையானதாக சமூகத்தில் பார்கிறார்கள். என் வயதில் இருப்பவர்கள் அதை செய்திருக்கவிலை என்றால் நான் சோகமான மற்றும் தனிமையான வாழ்க்கையை வாழ்வதாக எல்லோரும் நினைக்கிறார்கள்." "அது தவறு. உண்மையும் இல்லை.
ஒரு பெண் என்பவருக்கு விதிக்கப்படும் தரநிலைகளை அவள் பூர்த்தி செய்யவில்லை என்றாலும் அவள் மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் இருக்கிறாள் என சமந்தா வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.
நாக சைதன்யா இரண்டாம் திருமணம்
அதுமட்டுன்றி குறித்த நேர்காணலில் பெயரைகுறிப்பிட்டாமலே அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதுபற்றி கசப்பாக உணர்கிறீர்களா என்ற கேள்விக்கு, சமந்தா நிதானமான பதில் கொடுத்துள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், நான் எப்போதும் விலகி இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது பொறாமை தான். என்னிடம் அது இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
பொறாமை தான் எல்லா மோசமான விஷயங்களுக்கும் வேர். மற்ற எல்லாம் பரவாயில்லை, ஆனால் பொறாமை என்பதற்கு மட்டும் என்னிடம் இடமில்லை" என சமந்தா குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |