நாக சைதன்யாவின் திடீர் நிச்சயத்தார்த்தம்... சமந்தாவின் வைரல் பதிவு!
தெலுங்குப் பட சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை நடிகை சமந்தா காதல் திருமணம் செய்து 4 வருட மண வாழ்க்கைக்குப் பின்னர் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
இந்நிலையில் நாக சைதன்யா இப்போது நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்ய தயாரிகிவிட்டார். இவர்களின் நிச்சயதார்தர்த்தம் இன்று இடம்பெற்றுள்ளதாக உத்தியோக பூர்வ தகவல் வெளியாகியிருக்கின்றது.
நடிகை சமந்தாவை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்ட நாக சைதன்யாவுக்கு சோபிதா துலிபாலாவுக்கு ஏற்பட்ட காதல் காரணமாக கடந்த 2021ம் ஆண்டு சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்தார்.
இதை தொடர்ந்து நடிகை சமந்தா மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. அவருக்கு மியூசிட்டஸ் என்ற நோயும் ஏற்பட்டது. அதே நேரத்தில் சைதன்யா நடிகை சோபிதாவை காதலிக்கும் விடயம் இணையத்தில் அவ்வப்போது வைரலானது.
விவாகரதின் பின்னர் ஜீவனாம்சம் உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் வேண்டாம் என சமந்தா மறுத்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
தற்போது நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமண நிச்சயதார்த்தம் சமந்தா ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
சமந்தாவின் பதிவு
இந்நிலையில் நடிகை சமந்தா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில நேரங்களில், இழகுதன்மையுடன் இருப்பவர்கள் கடினமான தடைகளை எதிர்கொள்கின்றனர்.
உயர்ந்த சக்தி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. கஷ்டத்திற்கு மத்தியிலும் நிலைத்து நிற்கும் உங்களின் அசாத்திய திறமை உண்மையிலேயே போற்றத்தக்கது என ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்துக்கு ஆறுதல் பதிவை போட்டு இருக்கிறார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |