‘மாஸ்டர் செஃப்’ எனக்கு மிகவும் ஸ்பெஷல் - சமந்தா நெகிழ்ச்சி! காரணம் என்ன?
தமிழில் புதிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனலாக, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியாவின் ‘சோனி விழா’ அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாகத் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தச் சேனலில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான ‘செலிப்ரிட்டி மாஸ்டர் செஃப்’ ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தா ஓபன் டாக்
செஃப் வெங்கடேஷ் பட், செஃப் ஸ்ரேயா அட்கா, செஃப் சஷி செலியா ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியை ஆர்.ஜே. விஜய் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் நடிகை சமந்தா சிறப்பு நடுவராகக் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கான விளம்பர நேர்காணலில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட சமந்தா, “இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் ஸ்பெஷலானது.

காரணம், சிறுவயதில் நானும் என் அம்மாவும் ஒன்றாக ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியைப் பார்ப்போம். அது எங்களுக்கான தனிப்பட்ட நேரம். பல ஆண்டுகளுக்குப் பிறகு இதே நிகழ்ச்சியில் பிரபல நடுவராகப் பங்கேற்பேன் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.
தொலைக்காட்சிக்கு வந்தால் இப்படியொரு நிகழ்ச்சியில்தான் பங்கேற்க வேண்டும் என்பது என் ஆசை. இது எனக்குச் சரியான தேர்வு” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |