பிரிந்த கணவரின் பெயரை அழிக்காத சமந்தா! அம்பலப்படுத்திய டாட்டூ
நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவை குறிப்பிடும் டாட்டூவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சமந்தா
நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் விவாகரத்து பெற்றனர். தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
ஆனாலும் சமந்தா போட்டுள்ள டாட்டூவை இன்னும் அழிக்கவில்லை. ஆம் அவரது விலா எலும்புக்கு கீழும், கழுத்தின் கீழும் பச்சைக் குத்தியுள்ளார். நாக சைதன்யா நடித்த யே மாயா செசவே (ஒய்எம்சி) என்ற அவரது முதல் படத்தின் நினைவாக இந்த டாட்டூவை போட்டுள்ளார்.
சமீபத்தில் பிரியங்கா சோப்ராவின் சிட்டாடல் படத்தின் லண்டன் பிரீமியர் நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொண் போது, ஹாலிவுட் நட்சத்திரம், ஸ்டான்லி டுசியுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதனை கவனித்த ரசிகர்கள் அவரது விலா எலும்பிற்கு கீழே இருக்கும் டாட்டூவை கவனித்து வைரலாக்கி வருவதுடன், பரபரப்பான பேச்சுப்பொருளாகவும் இந்த புகைப்படம் காணப்படுகின்றது.