அசால்டாக 100 கிலோ எடையை தூக்கிய சமந்தா! பின்பு கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?
நடிகை சமந்தா 100 கிலோ எடை தூக்கும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் குறித்த காட்சியை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.
நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும், சமந்தா தெலுங்கு சினிமாவிலும் புகழ் பெற்று வருகின்றார். இறுதியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதிஜா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதன் பின்பு தற்போது பல மொழிகளில் அதிகமாக படங்களில் நடிக்கவுள்ளதார். சமீபத்தில் தனது காதல் கணவரை பிரிந்த இவர் தனது வேலையில் அதிகமாக கவனம் செலுத்தி வருகின்றார்.
மாடர்ன் உடையில் ஸ்டைலான நடனம்! ஐக்கி பெர்ரிக்கு தாமரை அளித்த பரிசு 

சமந்தாவின் உடற்பயிற்சி காட்சி
இவர் கடந்தாண்டு வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் நடனமாடிய பாடல் உலகில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகியது. இந்நிலையில் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படம், காணொளிகளை வெளியிட்டு வருகின்றார்.
மேலும் ரசிகர்களுடனும் கேள்வி பதில் கலந்துரையாடல் செய்வார். இந்நிலையில் எடை தூக்கும் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.
சமந்தாவின் ஜிம் பயிற்சியாளர் ஜூனைத் ஷேக் மேற்பார்வையில் 100 கிலோ சுமோ டெட்லிஃப்ட் எடையை சமந்தா தூக்கினார். 100 கிலோ எடையை தூக்கும் போது சமந்தா கொடுத்த ரியாக்ஷன் ரசிகர்கள் பலரை கவர்ந்துள்ளது.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        