செடியில் பூத்த மலரைப் போல புன்னகையோடு போஸ் கொடுத்த சமந்தா - வைரலாகும் வீடியோ
நடிகை சமந்தாவின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
புன்னகையோடு போஸ் கொடுத்த சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
இதன் பிறகு சமூகவலைத்தளங்களில் தன் பெயருக்கு பின்னால் இருந்த நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார். சமீபத்தில் நடிகை சமந்தா மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பிறகு, உடல் நிலை மேலும் மோசமடைந்ததால் ஐதராபாத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். பிறகு மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று நாடு திரும்பினார்.
சமீபத்தில் சமந்தாவின் ‘சகுந்தலம்’ படம் வெளியானது. இதற்கு அடுத்து, காதல் படமான “குஷி” என்ற படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை சமந்தாவின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் செடியில் பூத்த மலரைப் போல புன்னகையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
#samantharuthprabhu #samantha pic.twitter.com/CRRHhCD8mB
— Star Frames (@starframesoffl) June 14, 2023