பூதாகரமாக வெடித்த விவாகரத்து பிரச்சினை... மனைவி சமந்தாவுக்கு நாகசைதன்யா கொடுத்த பதில்!
தமிழ் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா- கணவர் நாகசைதன்யா இவர்களின் விவாகரத்து பிரச்சினை தான் கடந்த சில நாட்களாகவே பெரும் அளவில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
மேலும், அண்மையில் தனது மாமனார் நாகார்ஜுனாவின் பிறந்தநாளுக்கு சமந்தா வாழ்த்து கூறியிருந்தாலும் அதற்கு நாகார்ஜுனா பதிலளிக்கவில்லை.
அதனால், அவர்கள விவகாரத்து கிசுகிசு உண்மை தான் போல என்றும் ரசிகர்களும், மீடியாக்களும் பதிவிட்டு வந்தனர்.
இதனிடையே, சமந்தாவின் கணவர் நாக சைதன்யா நடித்துள்ள 'லவ் ஸ்டோரி' படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. நாகசைதன்யா டுவிட்டரில் பகிர்ந்த அந்தப் பதிவை ரிடுவீட் செய்து, படத்தின் நாயகி சாய் பல்லவியை மட்டும் 'டேக்' செய்து, 'வின்னர், குழுவினருக்கு நன்றி' என சமந்தா வாழ்த்தியிருந்தார்.
அதில் கூட அவர் நாகசைதன்யாவை ஏன் 'டேக்' செய்யவில்லை, அவருக்கென தனியாக ஏன் வாழ்த்து கூறவில்லை என்ற சந்தேகமும் கிளம்பியது. இதனால், வழக்கம் போல கிசுகிசுக்க எழ தொடங்க, தற்போது சமந்தாவிற்கு நன்றி தெரிவித்து 'நன்றி சாம்' என பதிலளித்துள்ளார் நாக சைதன்யா.
ஆனால், அந்த பதிலுக்கும் பல ரசிகர்கள் சந்தேகங்களை எழுப்பி கேள்வி கேட்டு வருகின்றனர். எப்படியும், இதைப்பற்றி இருவரும் பேசினால் மட்டுமே கிசுகிசுக்கள் தொடர்வது முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Thanks Sam !! https://t.co/XDI4gAOjmR
— chaitanya akkineni (@chay_akkineni) September 14, 2021