சர்ச்சையை விடுங்க.. பாசமாக கொஞ்சும் சமந்தா.... கண் வைக்கும் ரசிகர்கள்!
சமந்தாவுக்கும், அவரது கணவர் நாக தைன்யாவுக்கும் கருத்து வேறுபாடு, இருவரும் பிரியப் போகிறார்கள் என்ற செய்தி கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.
சமந்தாவோ, நாக சைதன்யாவோ இதுபற்றி எந்த விளக்கம் அளிக்காதது, இது உண்மைதானோ என்று ரசிகர்களையும் சந்தேகப்பட வைத்தது.
நேற்று நாக சைதன்யா நடித்துள்ள லவ் ஸ்டோரி படத்தின் ட்ரெய்லர் வெளியானது. சேகர் கம்மூலா இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் இந்தப் படம் வரும் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு தியேட்டரில் உங்களை சந்திக்கப் போவதில் மகிழ்ச்சி என நாக சைதன்யா ட்விட்டரில் ட்ரெய்லரை பகிர்ந்திருந்தார்.
அதற்கு சமந்தா, 'வின்னர். மொத்த டீமுக்கும் வாழ்த்துகள்' என்று பதிலளித்தார். இரண்டு பேருக்கும் நடுவில் கருத்து வேறுபாடு இருந்து பிரியப் போகிறார்கள் என்றால் நாக சைதன்யாவின் ட்வீட்டுக்கு எதற்கு சமந்தா பதிலளிக்கப் போகிறார், இது எல்லாமே வதந்தி என்று சமந்தா ரசிகர்கள் சமாதானமடைந்துள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வந்தார். தற்போது அவரின் செல்லப்பிராணியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகின்றார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஏன் இந்த திடீர் மாற்றம் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.