கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் நெருக்கமான நடனம்! சமந்தாவின் வைரல் புகைப்படம்
கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் சமந்தா நடனமாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சமந்தா
நடிகை சமந்த விஜய் தேவரகொண்டா இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில், இப்படம் செப்டம்பர் மாதம் முதல் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இசை நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
குறித்த படத்தின் பாடல் ஒன்றிற்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா மேடையில் நடனமாடியுள்ளார்.
பின்பு செய்தியாளர்களை சமந்தா சந்திக்காத நிலையில், விஜய் தேவரகொண்டா சந்தித்து பேசினார். அப்பொழுது சமந்தா இப்படத்திற்கு அதிகளவில் கஷ்டப்பட்டதாக கூறியுள்ளார்.
லைட் பட்டால் கண் எரிச்சல், தலைவலி ஆரம்பித்துவிடும் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு உங்களுக்காகவே நடனமாடினார் என்று கூறியுள்ளார்.
நீண்ட காலத்திற்கு பின்னர், நடிகை சமந்தாவை நேரில் சந்தித்த ரசிகர்கள், மேடையில் சமந்தாவின் நடனத்தைப் பார்த்து சந்தோஷத்தில் உற்சாகமடைந்ததோடு, குறித்த புகைப்படமும் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |