Food recipe: சமந்தாவுக்கு பிடித்த ஓட்ஸ் கேரட் இட்லி செய்வது எப்படி? இந்த பொருள் மட்டும் சேர்க்காதீங்க
உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு முறைக்கு பெயர் போனவர் தான் நடிகை சமந்தா.
அவருடைய சமூக வலைத்தளங்களில் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை எப்படி வாழலாம் என்பதனை பற்றிய பதிவுகள் போடுவது வழக்கம்.
அந்த வகையில், சமந்தா காலையில், எழுந்ததும் ஓட்ஸ் கேரட் இட்லியுடன் தான் அவருடைய நாளை துவங்குவாராம். ஏனெனின் இதில் காலோரிகள் குறைவு. அதே சமயம், ஓட்ஸ், கேரட் சேர்க்கப்படுவதால் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும் என்றும் நம்புகிறார்.
இவ்வளவு பிரபலமாக இருக்கும் ஓட்ஸ் கேரட் இட்லி எப்படி இலகுவாக தயாரிக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பொடித்த ஓட்ஸ்- 1 கப்
- ரவை- 1 1/2 கப்
- துருவிய கேரட்- 1/2 கப்
- தயிர்
- கடுகு மற்றும் சீரகம்
- உளுத்தம் பருப்பு
- நறுக்கிய பச்சை மிளகாய்- 1
- கறிவேப்பிலை
- உப்பு- சுவைக்கேற்ப
- எண்ணெய்- 1 தேக்கரண்டி
ஓட்ஸ் கேரட் இட்லி செய்யும் படிமுறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதங்க விடவும். கடுகு வெடித்து, பருப்பு பொன்னிறமாகும் வரை வதங்கவிட வேண்டும்.
அதன் பின்னர் ரவையை தாளித்து வைத்திருக்கும் பொருட்களுடன் கலந்து, 2 நிமிடங்கள் மிதமான சூட்டில் வறுக்கவும். அதனுடன் துருவி வைத்திருக்கும் கேரட்டையும் கலந்து விட்டு 2 நிமிடங்கள் வதங்க விடவும்.
அடுத்து, பொடித்த ஓட்ஸ், உப்பு இரண்டையும் ஒரு வாணலியில் போட்டு நன்றாக கலந்து விட்டு, வாசம் வரும் வரை வறுக்கவும். அதனை குளிர வைக்கவும். கலவையை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, தயிர் கலந்து தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
கலந்த பின்னர், 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். இட்லியை தட்டில் ஊற்றுவதற்கு முன்னர், மாவில் 1/2 தேக்கரண்டி உப்பு அல்லது பேக்கிங் சோடா சேர்க்கவும். குமிழ்கள் வரும் வரை மாவை புளிக்க வைக்க வேண்டும்.
கடைசியாக இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி, மாவை ஊற்றி இறக்கினால் சமந்தாவுக்கு பிரியமான ஓட்ஸ் கேரட் இட்லி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
