எவ்வளவு கஷ்டம் வந்தாலும்! மேடையில் அனைவர் முன்பும் கண்ணீர் விட்டு அழுத சமந்தா
சாகுந்தலம் பட விழாவில் தனது காதல் பற்றி எமோஷனலாக பேசி அழுதிருக்கிறார் சமந்தா.
சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான வலம் வருபவர் தான் நடிகை சமந்தா.
இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். நல்ல ஜோடிகளாக வலம் வந்த இருவரும் 2021ஆம் ஆண்டு சில காரணங்களால் தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர்.
இவர் விவாகரத்துக்கு பின்னர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அளவு கடந்த வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் சமந்தா பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வருகின்றார்.
சாகுந்தலம் திரைப்பட விழா
இவ்வாறிருக்கையில், இன்று சமந்தா நடிப்பில் உருவாக புராணக் கதையான சாகுந்தலம் திரைப்பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடைபெற்றது.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு இந்நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தார் சமந்தா. இந்நிகழ்ச்சியில் இயக்குனர் குணசேகர் சமந்தா பற்றி பேசியிருந்தார். அதில் இப்படத்தின் உண்மையான கதாநாயகன் சமந்தா தான் என பாராட்டி பேசியிருப்பார். அவரின் பேச்சைக் கேட்டதும் சமந்தா கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.
பின்னர் இவ்விழாவில் சமந்தா பேசுகையில்,
“இந்த தருணத்திற்காகத்தான் பல நாட்களாக காத்திருந்தேன். படம் எதிர்பார்த்தபடி ரிலீசாக வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் மட்டும் ஒரு சில மாயம் நடக்கும்.
அப்படித் தான் சாகுந்தலம் படத்துக்கும் நடந்தது. எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை” என்று தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.