ஆட்டோவில் ஜாலியாக ரைட் போன நடிகை சமந்தா... வைரலாகும் காணொளி
நடிகை சமந்தா ஜாலியாக ஆட்டோவில் பயணம் செய்யும் காணொளியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் எனும் வெப் தொடர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைரும் அறிந்ததே.ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள்.
அண்மையில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.
ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் தன்னை தானே மீட்டுக்கொண்டு கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வருகின்றார்.
தற்போது அவர் ஜிம் செல்லும் வீடியோகளும் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது.
தியானம் செய்வது ஆண்மிக விடயங்களில் கவனம் செலுத்தவது என தனது வாழ்க்கையை வித்தியாசமான முறையில் மகிழ்ச்சியாக அனுபவித்து வருகின்றார்.
இந்நிலையில் சமந்தா தற்போது ஆட்டோவில் பயணம் செய்தபோது, எடுத்த வீடியோவை அவர் வெளியிட அது தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
#Samantha pic.twitter.com/5a6xDG9Uo3
— Parthiban A (@ParthibanAPN) February 12, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
![வெற்றியின் ரகசியம்: உங்க வயது முக்கியமல்ல... உங்க உளவியல் வயது தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/0cff969b-8be0-4468-8b16-421f4aaa9ccd/25-67ac8e1dad626-md.webp)